இதனைத் தொடர்ந்து பிரெஞ்சு பொலிசார் மோசடி விசாரணையைத் துவக்கி உள்ளனர். ரெனால்ட் பாதுகாப்புத் துறையில் டொமினி ஜெவ்ரி பணியாற்றுகிறார். அவர் வெள்ளியன்று கைது செய்யப்பட்டார். அவர் கினியாவுக்கு விமானத்தில் பயணிக்க தயாரான போது கைது செய்யப்பட்டார். மேலும் 2 பாதுகாப்பு ஊழியர்களிடம் பொலிசார் விசாணை நடத்தினர். ரெனால்ட் நிறுவனங்களின் ரகசியங்களை 3 அதிகாரிகள் மைக்கேல் பால்தகார்டு, பெனார்டு மற்றும் தெனன்பம் ஆகியோர் வெளியிட்டதாக ஜனவரி மாதம் குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் மீதான குற்றச்சாற்று பலவீனம் அடைந்துள்ளது. பாரிஸ் நீதிபதி ஞாயிறன்று மோசடி குறித்த விசாரணையைத் துவக்கினார். இந்த விசாரணையின் போது கைது செய்யப்பட்ட அதிகாரி ஜெவ்ரி ஒரு தகவலாளியுடன் தொடர்பு வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலாளி யார் என்கிற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்ட ரெனால்ட் நிறுவன அதிகாரிகள் சுவிட்சர்லார்து மற்றும் லீக்டென் ஸ்டெய்னில் உள்ள வங்கிகளில் கணக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. விசாரணையாளர்களால் அந்த ரகசிய வங்கி கணக்குகளை கண்டுபிடிக்க முடியவில்லை. ரெனால்ட் கார் நிறுவன ரகசியம் திருட்டு குறித்த விவகாரம் இந்நிறுவனத்தின் அதிபர்கள் கார்லோஸ் கோஸ்ன் மற்றும் பாட்ரிக் பெலாட்டாவுக்கு மனப்புழுக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. |
Monday, 14 March 2011
கார் உற்பத்தி நிறுவனத்தின் தகவல்கள் திருட்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment