மேலும் சிலி, பெரு, மெக்சிகோ ஆகிய நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா, ஒரிகன் மற்றும் அலஸ்கா மாகாணங்களின் சில பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து சுமார் 32 அடி உயரத்திற்கு அங்கு சுனாமி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு அவசர காலநிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல ஆசிய பசுபிக் வலய நாடுகளையும் சுனாமி தாக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் இதுவரை 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டோக்கிய நகரில் சுமார் 400 000 பேருக்கான மின்னிணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேற்படி நில அதிர்வானது அண்மையில் நியூசிலாந்து கிரைஸ்ட் சர்ச்சில் ஏற்பட்டதை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. |
Saturday, 12 March 2011
ஜப்பானைத் தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை (வீடியோ இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment