மீட்புப் பணிகள் தீவிரமாக துவங்கிய நிலையில் பலியானவர்கள் எண்ணிக்கை குறித்த தகவல்கள் இனிமேல் தெரிய வரும். ஜப்பான் நாட்டை உலுக்கிய 8.9 ரிச்டர் அளவு நிலநடுக்கத்தால் செண்டாய், டோக்கியோ உள்பட பல பகுதிகள் கடும் இழப்பை சந்தித்துள்ளன. கட்டடங்கள் இடிந்தன. ரோடுகள் பலத்த சேதம் அடைந்துள்ளது. ஜப்பானின் இந்த பேரழிவை கண்டு உலக நாடுகள் கவலை அடைந்துள்ளது. மேலும் ஜப்பானில் மீட்பு பணிகள் மற்றும் உதவிகரம் நீட்ட இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் முன்வந்துள்ளன. ஜப்பான் அரசு மீட்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. கடலோர பகுதியில் காணாமல் போன நான்கு ரயில்களை தேடும் பணி நடைபெறுகிறது. மேலும் புகுஷிமா அணு உலை அமைந்துள்ள பகுதியில் உள்ளவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் பணியும் நடைபெறுகிறது. ![]() ![]() ![]() ![]() |
Saturday, 12 March 2011
ஜப்பான் பேரழிவு: இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி
Subscribe to:
Post Comments (Atom)




No comments:
Post a Comment