Monday, 14 March 2011

நடு இரவில் பெண்களை துன்புறுத்திய இளைஞன் கைது



நடு இரவில் பெண்களைப் பாலியல் ரீதியில் தாக்கிய 19 வயதுடைய இளைஞன் ஒருவன் வின்னிபெக் பிராந்தியப் பொலிசாரால் கைது செய்யப்படிருக்கிறான்.
கைது செய்யப்பட்ட இந்த இளைஞனது பெயர் விபரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.
கடந்த வெள்ளியன்று கனடாவில் உள்ள வின்னிபெக்கின் டப்ரன் அவனியூவினது 200 வது புளொக் பகுதியில் வைத்து இந்த இளைஞன் கைது செய்யப்பட்டிருந்தான்.
கடந்த புதனன்று அதிகாலை 2.30 மணியளவில் இறுதியாகவொரு சம்பவமும், ஆறு நாட்களுக்கு முன்னர் அதிகாலைப் பகுதியில் பிறிதொரு சம்பவமும் இடம்பெற்றதாகக் பொலிசார் கூறினர்.
தங்கள் மீது பாலியல் ரீதியிலான தாக்குதலை மேற்கொள்ளுவதற்கு முன்னர் குறிப்பிட்ட இந்த இளைஞன் தங்கள் மீது சரமாரியாகத் தாக்கியதாக பாதிக்கப்பட்ட பெண்கள் பொலிசில் முறையிட்டிருந்தார்கள்.

No comments:

Post a Comment