ஜப்பானின் வடகிழக்கு கடலோரப்பகுதியில் வெள்ளிக்கிழமையன்று 8.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி ஏற்பட்டது. இரு இயற்கை பேரிடர்களால் அணு உலை வெடிப்பு பிரச்சனை ஏற்பட்டது. சுனாமியில் 1400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த இறப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்தை எட்டியது. அணு உலையை சுற்றியுள்ள 20 கி.மீ தூரம் வரை உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். அணு உலை கதிர் வீச்சு தாக்கத்திற்கு 160 பேர் பலியாகியுள்ளனர். ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஜப்பான் அணு பாதுகாப்பு முகமையின் ரியோ மியாகே கூறுகையில்,"அணு உலையில் ஹைட்ரஜன் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்பு அணு உலையை பாதிக்குமா என்பது பற்றி உடனடியாக தெரியவில்லை" என்றார். ஜப்பான் தலைமை கேபினட் செயலாளர் யுகியோ எடானோ கூறுகையில்,"20 கி.மீ சுற்றளவில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" என்றார். ஒனகவா பகுதியில் கூடுதலான கதிர்வீச்சு காணப்பட்டதால் அங்கு அவசர நிலையை சர்வதேச அணுசக்தி கழகம் அறிவித்தது. இந்த நிலையில் வட கிழக்கு பகுதியில் 3 மீற்றர் உயரத்திற்கு கடல் அலை எழும்பியது. இதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டரின் இன்னொரு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இது பொய்யான எச்சரிக்கை ஜப்பானிய ஆய்வு மையம் தெரிவித்தது. இதற்கிடையே டோக்யோவுக்கு வட கிழக்கே 150 கி.மீ தொலைவில் பயங்கர நிலஅதிர்வு ஏற்பட்டது. இதில் ஜப்பான் தலைநகரில் கட்டிடங்கள் அதிர்ந்தன. இருப்பினும் நிர்வாகத்தினர் சுனாமி அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. |
Monday, 14 March 2011
ஜப்பானில் இரண்டாவது அணு உலை வெடித்தது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment