Monday, 14 March 2011

உலக வரலாற்றினை புரட்டி போட்ட டிவிட்டர்



அரசுக்கெதிராக மக்கள் கிளர்ச்சி, மன்னருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி, அதிபரை பதவி விலக்கோரி மக்கள் கிளர்ச்சி ‌என ஆப்ரிக்‌கா, மத்திய கிழக்கு நாடுகளில் புரட்சிக்கு உந்து சக்தியாக விளங்கியது சமூக வலை தளமான டிவிட்டர்.
இந்த சமூக வலை தளம் துவங்கி தனது 5 வது ஆண்டினை நிறைவு செய்கிறது. அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவை தலைமையிடமாக கொண்டு கடந்த 2006 ம் ஆண்டு மார்ச் மாதம் 21 ம் திகதி துவங்கப்பட்டது.
இன்று உலக தலைவர்கள் தங்களது கருத்துக்கள், சிந்தனைகளை பரப்ப சிறந்த இணையதளமாக டிவிட்டரை பயன்படுத்துகின்றனர். தற்போது 200 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் டிவிட்டரை பயன்படுத்துவதாக ஆய்வு கூறுகிறது. தினமும் 140 மில்லியன் வாசகர்கள் 140 கேரக்டர்களில் குறுந்தகவல்களை டிவிட்டரில் பயன்படுத்துகின்றனர்.
கடந்த 2010 ம் ஆண்டு 25 மில்லியன் மக்கள் டிவிட்டரை பயன்படுத்தியுள்ளனர். 100 மில்லியன் நிறுவனங்கள் டிவிட்டரில் கணக்கு தொடங்கியுள்ளன. சான்பிரான்ஸிஸ்கோ நகரைச் சேர்ந்த ஜாக்தூர்சே என்பவரின் மூளையில் உதித்தது டிவிட்டர் என்ற சமூக வலை தளம்.
இதன் இணை நிறுவனரும் இவரே அமெரிக்காவின் ஒடியோ மாகாணத்தில் போடோகேஸ்டிங் நிறுவனத்தில் இவர் பணியாற்றிக் கொண்டிருந்த போது சக ஊழியர்களான பிஸ்ஸ்டோன், ஈவான் வில்லியம் ஆகியோர் கூட்டாக சேர்ந்து ‌டிவிடர் என வலைதளத்தினை துவக்கினர். பின்னர் இத‌னை கடந்த 2007 ம் ஆண்டு டிவிட்டர் என பெயரிட்டனர்.
இன்ற உலக நாடுகளில் டிவிட்டரின் சமூக வலைதளத்தின் வாயிலாக வெளிவரும் கருத்துக்களால் தான் எகிப்து, ஓமன், ஏமன், அல்ஜீரியா, துனீசியா,லிபியா போன்ற நாடுகளில் அரசுக்கெதிராக புரட்சியை ஏற்படுத்தி ஆட்சி மாற்றம் ஏற்பட காரணமாயின. இதனாலேயே மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் முன்பே சில நாடுகள் இணையதளத்தினை முடக்க முயன்றன.
தற்போது சீனாவில் மல்லிகை புரட்சி துளிர்விட்டுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களும் மூலக்காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது. உலகளவில் அதிக எண்ணிக்கையில் பிரபல பாப்பாடகர் லேடி கஹா தனது டிவீட்டர் கணக்கில் 8.78 மில்லியன் நண்பர்களை இணைத்துள்ளார்.
இது குறித்து டிவிட்டர் நிறுவனர்கள் ஜாக்தூர்சே, பிஸ்ஸ்டோன், ஈவான் வில்லியம் ஆகியோர் கூறியதாவது: டெக்ஸ்ட் மெ‌சேஸ்களை பரிமாறிக் கொள்வதற்காக வேடிக்கையாக டிவிட்டரை துவங்கினோம். ஆனால் இன்றுடன் கடந்த 5 ஆண்டுகளில் உலகளவில் பிரபலமடைந்துள்ளது.
சமீபத்தில் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலின் போது அந்நாட்டு மக்களிடம் உடனுக்குடன் தகவல்களை பெற பேரூதவியாக இருந்தது. சர்வாதிகார ஆட்சியினால் இருண்டு போய்கிடந்த நாடுகளுக்கு ஜனநாயகத்தின் திறவுகோலாக டிவிட்டர் இருந்துள்ளது என்றனர்.

No comments:

Post a Comment