Thursday, 24 March 2011

கடாபியின் மகன் மருத்துவமனையில் இறந்தாக தகவல்

கடாபியின் ஓர் மகனான ஹமீஸ் கடாபி மருத்துவமனையில் இறந்து விட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று அமெரிக்க படைகள் லிபியா மீது குண்டு மழை பொழிந்தன. இதில் லிபியாவில் உள்ள திரிபோலியின் கடாபியின் அலுவலகத்திலும், கடாபி உறவினர்கள் வசிக்கும் இடத்தை கூறி வைத்து தாக்குதல் நடத்தினர்.

அதில் கடாபியின் அலுவலக வளாகம் மற்றும் அலுவலகம் இடிந்து விழுந்தது.அங்கு அப்பொழுது இருந்த கடாபி மகன் ஹமீஸ் மற்றும் கடாபியின் உறவினர்களும் தீ, இடுபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

இதில் தீயில் படுகாயம் அடைந்த ஹமீஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தாக அங்குள்ள ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன .

No comments:

Post a Comment