| மதுரை விமான நிலையத்திற்கு வரும் ஒரு விமானத்தில் திடீரென சிவப்பு விளக்கு எரிவதாக விமானி கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அந்த விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் இன்ஜினில் தீ பற்றியதாகவும், அதிலிருந்த பயணிகள் விபத்தில் சிக்கியிருப்பதாகவும் கட்டுபாட்டு அறைக்கு மீண்டும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே விமான நிலையத்தில் தயாராக இருந்த விமான நிலைய தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்து பயணிகளை காப்பாற்றுவது போல ஒத்திகை நிகழ்ச்சி நடத்தி காட்டப்பட்டது. இதற்காக விமானத்தில் தீ பிடித்த இடத்திற்கு அருகே செல்லும் போது வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சி அணைக்கப்பட்டது. அங்கிருந்த பயணிகளை மீட்புக்குழுவினர் மீட்டு முதலுதவிக்கு அனுப்பி வைத்தனர். நிகழ்ச்சியில் விமான நிலைய அதிகாரி சங்கையா பாண்டியன், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு உதவி கமிஷனர் கிருபாகரன், தீயணைப்பு அதிகாரி நிதின் பல்கர், மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி கமாண்டர் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர். சங்கையா பாண்டியன் கூறுகையில்,"தீ விபத்துக்களை தடுக்க நவீன வசதிகள் கொண்ட ரூ.11 கோடி செலவில் செக்கோஸ்லோவாக்கியா நாட்டில் மூன்று ரோசன்பர்க் தீயணைப்பு வாகனங்கள் ஓராண்டுக்கு முன் வாங்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அவசர காலத்தின் போது தீயணைப்பு படையினர் மற்றும் மருத்துவ குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட இத்தகைய நிகழ்ச்சிகள் உதவும்" என்றார். |
Saturday, 26 March 2011
விமானத்தில் தீடீரென தீ பிடித்தால் எவ்வாறு தடுப்பது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment