Friday, 15 April 2011

6 வயது சிறுமி கொலை வழக்கில் மேலும் இருவர் கைது



லண்டன் கடை வீதியில் தமிழ்ச்சிறுமி துஷா கமலேஸ்வரன் சுடப்பட்ட வழக்கில் 21 வயது மற்றும் 17 வயது இளைஞர்கள் இருவரை பொலிசார் கைது செய்தனர்.
தெற்கு லண்டனில் கடந்த மார்ச் மாதம் 29ம் திகதியன்று ஸ்டாக்வெல் ஸ்டோரில் தமிழ்ச் சிறுமி துஷா கமலேஸ்வரனும், 35 வயது ரோஷன் செல்வக்குமாரும் குண்டடிப்பட்டனர். சிறுமிக்கு நெஞ்சுப்பகுதியிலும், செல்வக்குமாருக்கு தலையிலும் காயங்கள் ஏற்பட்டது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் கொலை முயற்சி குற்றச்சாற்றுகள் ஏற்கனவே காசிம் சோலவோலி மற்றும் அந்தோனி மெக்கல்லா ஆகியோர் மீது உள்ளது. இவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நபர்கள் ஜீன் மாதம் 10ம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.
குண்டடிப்பட்ட சிறுமி துஷா கமலேஸ்வரன் தனது தாய் மற்றும் உடன்பிறப்புகளுடன் தனது மாமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வந்த போது தாக்கப்பட்டார்.

No comments:

Post a Comment