எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்(82). இவரது ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினார்கள். 18 நாள் நடந்த கடும் போராட்டத்துக்கு பிறகு முபாரக் பதவி விலகினார். அதை தொடர்ந்து ஆட்சி அதிகாரம் ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து கெய்ரோவில் இருந்து அவர் ஷாம் அல் ஷேக் நகரில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். அவர் பதவியில் இருந்த போது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது மற்றும் ஊழலில் ஈடுபட்டதாக புகார்கள் கூறப்பட்டுள்ளன. ஆகவே முபாரக்கும் அவரது 2 மகன்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் ராணுவ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் போது முபாரக்குக்கு நெஞ்சுவலியும் அதை தொடர்ந்து மாரடைப்பும் ஏற்பட்டது. எனவே அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நலக்கோளாறை தொடர்ந்து முபாரக் மற்றும் அவரது மகன்களிடம் நடத்திய விசாரணை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று முபாரக் கைது செய்யப்பட்டார். அவர்கள் விசாரணைக்காக கெய்ரோவில் உள்ள கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டது. |
Friday, 15 April 2011
எகிப்து முன்னாள் அதிபர் முபாரக் கைது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment