Friday, 15 April 2011

இத்தாலி சமூக ஆர்வலர் அர்கோனி தூக்கிலிடப்பட்டார்



பாலஸ்தீன நடவடிக்கைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த 36 வயது இத்தாலி சமூக ஆர்வலர் விட்டோரியா அரிகோனி வியாழக்கிழமை கடத்தப்பட்டார்.
அவர் கடத்தப்பட்ட சில மணி நேரத்தில் ஹமாஸ் நிர்வாகம் செய்யும் காசா திட்டுப்பகுதியில் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். ஹமாஸ் பிரிவினருடன் மோதும் ஒரு தீவிரவாதக் கும்பல் இத்தாலி ஆர்வலர் விட்டோரியாவை கடத்தியது. தங்கள் குழுத் தலைவரை விடுவிக்கக் கோரி இத்தாலி ஆர்வலரை தீவிரவாதக் கும்பல் கடத்தியது.
இத்தாலி ஆர்வலர் கொலை செய்யப்பட்டது குறித்து இத்தாலி அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இது காட்டு மிராண்டித்தனமான விரும்பத்தகாத கொலை என தெரிவித்தது.
கடந்த 2007ம் ஆண்டு பி.பி.சி பத்திரிக்கையாளர் ஆலன் ஜனர் சன் காசா திட்டுப்பகுதியில் கடத்தப்பட்டார். 4 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இத்தாலி சமூக ஆர்வலர் அரிகோனி காசா திட்டுப் பகுதியில் கடத்தப்பட்டு விபரீத முடிவை சந்தித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை காலை அவரது உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனை முன்பாக நண்பர்களும், சமூக ஆர்வலர்களும் பெரும் திரளாக கூடினர். சமூக ஆர்வலர் விட்டோரியா அரிகோனியை இஸ்லாமிய அமைப்பான சலாபிஸ்ட் தீவிரவாதிகள் கடத்தினர்.
அந்தத் தீவிரவாதிகள் சிறையில் உள்ள தலைவர்கள் விடுவிக்கப்பட்டால் வெள்ளிக்கிழமை மதியத்திற்குள் அரிகோனியை கொலை செய்வோம் என எச்சரித்து இருந்தனர். அரிகோனி பல ஆண்டுகளாக பாலஸ்தீனத்தில் மக்களுக்கு சேவை ஆற்றி வந்தார். அவர் கடத்தப்பட்ட பின்னர் கண்கள் கட்டப்பட்டு தீவிரவாதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டார்.

No comments:

Post a Comment