Thursday, 28 April 2011

அமெரிக்காவில் பயங்கர புயல் காற்று: 60 பேர் பலி



அலபாமா மற்றும் அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் கடுமையான புயல் காற்று வீசியது. புயல் காற்று அபாய நிலையைத் தொடர்ந்து அலபாமா, அர்கனாஸ், டெனேசே கவர்னர்கள் அவசர நிலையை அறிவித்தனர்.புயல் காற்று சீற்றத்திற்கு அலபாமாவில் மட்டும் 45 பேர் பலியானார்கள். அலபாமாவின் டுஸ்கலுசா நகரில் மட்டும் பயங்கரக்காற்றுக்கு 15 பேர் இறந்தனர். அமெரிக்காவின் தெற்குப் பிராந்தியத்தில் ஒரு நாளில் மட்டும் 60 பேர் இறந்தார்கள்.
அலபாமாவுக்கு அவசர நிலை உதவி வழங்க யு.எஸ் ஜனாதிபதி பராக் ஒபாமா ஒப்புதல் அளித்தார். புயல் காற்றில் பாதித்தோருக்கு உதவி அளித்தல் மற்றும் தேடுதல் பணிக்கும் ஒப்புதல் தரப்பட்டது.
புதன்கிழமை ஏற்பட்ட புயல் காற்று தாக்குதலில் மி.சி.சி.பியில் 11 பேர், ஜியார்ஜியாவில் 2 பேர், அர்கனாஸ் மற்றும் டெனேசோ பகுதிகளில் தலா ஒருவர் இறந்தனர். மத்திய அமெரிக்காவில் இந்த வாரத் துவக்கத்தில் அர்கன்சாஸ் மற்றும் ஸ்வாதே பகுதிகளை கடந்து புயல் தாக்கி உள்ளது.
தற்போதைய புயல் எச்சரிக்கைத் தகவல்படி வடக்கு மற்றும் தெற்கு கரோலினா பகுதியை தாக்கும் என்றும் பின்னர் வடகிழக்கு நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் மழை பாதிப்பில் மிகவும் சேதமடைந்துள்ள அலபாமாவுக்கு அமெரிக்கா கூட்டாச்சியின் நிதி உதவியை ஒபாமா அளித்துள்ளார்.

No comments:

Post a Comment