அவுஸ்திரேலியா காலிறுதியிலேயே உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய போதும் 128 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இறுதி ஆட்டத்தில் தோற்ற இலங்கை அணி 118 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 116 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், இங்கிலாந்து 105 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான், நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம் அணிகள் முறையே 6, 7, 8, 9-வது இடங்களில் உள்ளன. துடுப்பாட்ட தரவரிசையில்... தென் ஆப்பிரிக்காவின் ஆம்லா, டிவில்லியர்ஸ், இலங்கையின் தில்ஷான், சங்ககரா, இங்கிலாந்தின் ஜொனாதன் டிராட் ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர். இந்திய வீரர் கோலி 6-வது இடத்திலும், கேப்டன் மகேந்திர சிங் தோனி 8-வது இடத்திலும், சச்சின் 9-வது இடத்திலும், கம்பீர் 10-வது இடத்திலும், யுவராஜ் 17-வது இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சு தரப்படுத்தலில்... நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி முதலிடத்திலும், ஜிம்பாப்வே வீரர் பிரைஸ் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்தின் ஸ்வான் 3-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் 4-வது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் ஹர்பஜன் சிங் 18-வது இடத்தில் உள்ளார். சகலதுறை ஆட்டக்காரர் தரவரிசையில்... வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி 3-வது இடத்திலும் உள்ளனர். இந்தியாவின் யுவராஜ் 4-வது இடத்தில் உள்ளார். |
Wednesday, 6 April 2011
ஐ.சி.சி. ஒருநாள் போட்டியின் தரப்படுத்தல் முடிவுகள் வெளியீடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment