Friday, 15 April 2011

சுனாமி அச்சத்தில் கரையோரப் பிரதேசங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்வு



சுனாமிப் பேரலை தாக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாக கரையோரப் பகுதியின் பல இடங்களில் வசித்த மக்கள் இன்று அதிகாலை தொடக்கம் இடம்பெயரத் தொடங்கியுள்ளனர்.
நீர்கொழும்பு தொட்டு மாத்தறை வரையான கரையோரப் பகுதிகளின் பல்வேறு இடங்களில் வசித்த மீனவர் குடும்பங்களைச் சோ்ந்த மக்களே அவ்வாறு உள்நாட்டுப் பகுதியை நோக்கியை இடம் பெயரத் தலைப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு தனியார் தொலைக்காட்சியொன்றில் கருத்துத் தெரிவித்திருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் சுமாத்ரா தீவின் அருகில் ஏற்படும் நிலநடுக்கமொன்றின் காரணமாக இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று கருத்து வெளியிட்டிருந்தார்.
ஜப்பானிய சுனாமி அனர்த்தத்தின் பின் அவர் வெளியிட்ட இரண்டு எதிர்வுகூறல்கள் பலித்துள்ளதன் காரணமாக அவரது இந்த எதிர்வு கூறல் பொதுமக்களை பெரும் அச்சத்திற்குள் ஆழ்த்தியுள்ளதன் காரணமாக கரையோரப் பிரதேசங்களிலிருந்து இடம்பெயரத் தலைப்பட்டுள்ளனர்.
ஆயினும் இலங்கைக்கு இதுவரை அப்படியான அச்சுறுத்தல்கள் இல்லையென்று வலியுறுத்தியுள்ள அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையம், அவ்வாறான பட்சத்தில் பத்து வினாடிகளுக்குள் முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிடத் தாம் தயாராக இருப்பதாகவும் 

No comments:

Post a Comment