Friday, 15 April 2011

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் தற்கொலைச் சம்பவங்கள்



யாழ்ப்பாணத்தில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக யாழ். போதனா மருத்துவமனையின் ஊடக அறிக்கை தெரிவிக்கின்றது.
கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் யாழ்ப்பாணத்தில் தற்கொலைச் சம்பவங்களின் விகிதம் அதிகரித்திருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. அதற்கான காரணங்களும் அந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
இளவயதுக் காதல் தோல்விகள், பரீட்சையில் சித்தியின்மை, அதிகரித்து வரும் குடும்ப வன்முறைச் சம்பவங்கள்,வறுமை, ஆதரவுக்கு யாருமற்ற அநாதரவான நிலைமை என்பனவே யாழ்ப்பாணத்தில் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதற்குக் காரணம் என்று யாழ். போதனா மருத்துவமனையின் உளநலச் சிகிச்சைப் பிரிவு குறிப்பிடுகின்றது.
இவ்வாறாக அதிகரித்துச் செல்லும் தற்கொலை மோகத்தை கட்டுப்படுத்த வெளிநாடுகளிலிருந்தும் உளவளத்துணை நிபுணர்கள் வரவழைக்கப்படவுள்ளதுடன், மாவட்டம் தழுவிய ரீதியில் உளவளத்துணை கருத்தரங்குகளை நடாத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனையின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment