இவற்றுள் சில ஆயுதங்களை தனது ஒன்பது வயதான சகோதரனோடு பகிர்ந்து கொள்ளும் படுக்கை அறையில் அவர் மறைத்து வைத்துள்ளார். சப் மெஷின் துப்பாக்கிகள், தன்னியக்க கைத் துப்பாக்கிகள், ஷொட்கன்கள் மற்றும் தோட்டாக்கள் என்பன இங்கிருந்து மீட்கப்பட்டுள்ளன. கொலைகாரக் கும்பல் ஒன்றுக்குத் தேவையான போது இவற்றை வழங்குவதற்காகவே இவர் பதுக்கி வைத்துள்ளார். ஹொக்ஸ்டன் போய்ஸ் மற்றும் லண்டன் பீள்ட் போய்ஸ் ஆகிய இரண்டு கும்பல்களுக்கு இடையிலான மோதலில் சிக்கி 16 வயதான மாணவி எக்னஸ் சினா இனகோஜு என்ற மாணவி கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் பொலிஸார் அதிர்ச்சி அடையும் வகையில் அவர்களிடம் இந்த ஆயுதங்கள் சிக்கியுள்ளன. இது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். |
Friday, 15 April 2011
15 வயது சிறுவனின் படுக்கை அறையில் கண்டறியப்பட்ட பயங்கர ஆயுதங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment