Friday, 15 April 2011

அமெரிக்கர்களை விட அதிகமாக செலவழிக்கும் கனேடியர்கள்



உலக நாடுகளில் வல்லரசாக திகழும் அமெரிக்க மக்களைக் காட்டிலும் கூடுதல் நுகர்வோர் பொருட்களை வாங்குபவர்களாக கனடிய மக்கள் உள்ளனர்.
அமெரிக்கா டொலர் மதிப்புக்கு சமமாக கனடா டொலர் இருந்த போதும், கனடா மக்கள் இறக்குமதி பொருட்களை கூடுதல் விலைக்கே வாங்க வேண்டி உள்ளது.
அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்குவது தொடர்பாக கனடா மக்கள் மனதுக்குள் கேள்வி எழுப்பிக் கொள்கிறார்கள். வருகிற 2012ம் ஆண்டு வரை கனடா டொலர் மதிப்பு உயர்ந்த நிலையில் இருக்கும் என மாண்ட்ரீல் வங்கி பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
பி.எம்.ஓ அறிக்கை உருவாக்க நிபுணரான டக்லஸ் போர்ட்டர் கூறுகையில்,"கனடா மக்கள் நாணயத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தும் போது பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியும். இறக்குமதிப் பொருட்கள் விலையையும் குறைக்க முடியும்" என்றார்.
கனடாவில் கூடுதல் விலைகொடுத்து வாங்கும் பொருட்களை அமெரிக்காவில் வாங்கும் போது விலை மலிவாக உள்ளது. கனடா அமெரிக்க டொலர்களின் மதிப்பு ஏறக்குறைய இணையாக உள்ள போதும் சில்லரை விற்பனையாளர்கள் விலையை குறைக்கவில்லை.
இதனால் அமெரிக்க விலையைக் காட்டிலும், கனடாவில் பொருட்களுக்கு கூடுதல் விலை தரவேண்டி உள்ளது என கனடா நுகர்வோர் சங்கத் தலைவர் ப்ரூஸ் கிரேன் குற்றம் சாற்றினார்.
உலகில் உள்ள பெரும் நிறுவனங்கள் தங்களது சந்தை மதிப்பை அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் உயர்த்த விரும்புகின்றன. இதனால் பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது.

No comments:

Post a Comment