Friday, 15 April 2011

ஜேர்மன் அதிபர் மீது முட்டை வீசிய ஆசாமி கைது



ஜேர்மனில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த அந்நாட்டு அதிபர் மீது மர்ம ஆசாமி ஒருவன் முட்டையை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜேர்மன் அதிபராக இருப்பவர் கிறிஸ்டியன் ஒல்ப்(51). வைஸ்பேடன் மாகாணத்தில் உள்ள ஒரு நகருக்கு பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்தார்.
அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கூட்டத்திலிருந்து 48 வயதுமதிக்கத்தக்க ஆசாமி திடீரென தனது கையிலிருந்த முட்டையினை அதிபர் கிறஸ்டியன் ஒல்ப் மீது வீசினார்.
இதில் கிறிஸ்டியன் ஒல்பின் மேல் கோர்ட்டில் விழுந்து முட்டையின் மஞ்சள் கரு அவருடன் வந்த பிரதமர் வோல்கர்பெப்பர் என்பவரின் மீது விழுந்தது. சம்பவம் நடந்த உடன் அருகில் இருந்த பொலிசார் முட்டை வீசியவரை கைது செய்தனர்.
எனினும் நிலைமையை சமாளித்த அதிபர் அங்கு மேலும் அசம்பாவிதங்கள் நிகழாமல் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிட்டார்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில்,"இப்படி ஒரு சம்பவம் நடப்பது ஜேர்மன் அரசியல்வாதிகளுக்கு புதிதல்ல. இதே போன்று கடந்த 1991ம் ஆண்டு ஹால்லே நகரில், ஜேர்மன் சான்சலராக இருந்த டொக்டர் ஹெல்மெட்கோல் மீது பயங்கர தாக்குதல் சம்பவம் நடந்தது. இதில் அவர் படுகாயம‌டைந்தார்" என்றார்.

No comments:

Post a Comment