இவர் விடுமுறையை கழிக்க துபாய் நாட்டுக்கு சுற்றுலா சென்று இருந்தார். அங்குள்ள புர்ஜ் அல் அராப் ஓட்டலில் தங்கியிருந்தார். அப்போது அவர் அங்கு தங்கியிருந்த மற்றொருவருடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளார் என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கடந்த 6ந் திகதி அவர் கைது செய்யப்பட்டு துபாய் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவரிடம் பொலிசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரை பொலிஸ் அதிகாரிகள் அடித்து உதைத்ததாக தெரிகிறது. குடிக்க தண்ணீரும், உணவும் தர மறுத்தனர். இதற்கிடையே பொலிசார் கடுமையாக அடித்து உதைத்தால் லீ பிராட்லி பிரவுன் பரிதாபமாக இறந்தார். இத்தகவலை அவருடன் சிறையில் இருந்த நபர் சகோதரிக்கு கைத்தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தார். எனவே அவர்களது குடும்பத்தினர் இங்கிலாந்து அரசிடம் புகார் செய்தனர். இது குறித்து துபாயில் உள்ள இங்கிலாந்து தூதரகத்திடம் அந்நாட்டு அரசு விசாரணை நடத்தியது. பிராட்லி இறந்ததை தூதரக அதிகாரிகள் உறுதி செய்தனர். இச்சம்பவம் துபாய் நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள இங்கிலாந்து மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. |
Friday, 15 April 2011
சுற்றுலாவுக்கு சென்ற பயணியை அடித்துக் கொன்ற பொலிஸ் அதிகாரிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment