Thursday, 28 April 2011

கனடாவின் மணிடோபா மாகாணத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது



சில ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் மணிடோபா மாகாணத்திற்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.அருகாமையில் உள்ள சாஸ்க் கட்ச்வான் பகுதியிலும் வெள்ள நீர் ஊடுருவும் நிலை உள்ளது. மணிடோபா மாகாண அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
கியூ அபெல்லே ஆறு, அசினிபோய்னே ஆறு மற்றும் சோரிஸ் ஒட்டிய பகுதிகளில் வெள்ள நீர் புகும் அபாயம் உள்ளது. லே டெலிவர் அருகே ரெட் ஆறு நீர் மட்டம் 784.15 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
வின்னிபெக் பகுதியில் ஜேம்ஸ் அவென்யூவில் கண்காணிக்கப்பட்டதில் ரெட் ஆறு நீர் மட்டம் குறைந்தது. இருப்பினும் அசிபோய்னே பகுதியில் நீர் வரத்து அதிகரிக்கும் என அதிகாரிகள் கூறினர். சாஸ்க் கட்ச் வான் பகுதியிலும் வெள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ரேமோமர் என்ற இடத்திலேயே ஒரு பெண் உட்பட பலர் வீட்டில் மழை நீர் சூழ்ந்ததில் பரிதவித்து நின்றனர். மழை வெள்ளம் காரணமாக மக்கள் கார் பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர். மழை நீரில் சிக்கிக் கொண்ட வாகனங்கள் பழுதடைந்து பாதி வழியிலேயே நிற்கின்றன.
வெள்ள நீர் ஆற்றில் மட்டும் அல்ல முக்கியச் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றனது. மழை வெள்ளப் பாதிப்பால் தூய்மையான குடிநீர் பெறுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. பெருக்கெடுத்து ஓடி வரும் வெள்ள நீரால் மக்கள் தங்கள் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்வதிலும் சிரமம் ஏற்பட்டது.

No comments:

Post a Comment