Sunday, 1 May 2011

சீனாவில் மக்கள் தொகை 134 கோடியை எட்டியது



சீனாவில் தற்போதைய மக்கள் தொகை 134 கோடி என்று கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
சீனாவில் 2010ம் ஆண்டு இறுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கியது. அதற்கு முன் 2000ம் ஆண்டில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி சீனாவில் இப்போதைய மக்கள்தொகை 134 கோடி. அவர்களில் சுமார் 50 சதவீத மக்கள் நாட்டின் நகரங்களில் வசிக்கின்றனர். 2000ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது இது 36 சதவீதமாக இருந்தது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் எண்ணிக்கையை இப்போது 3 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்த மக்கள்தொகையில் அவர்களது பங்கு 13.3 சதவீதம்.
எனினும் முந்தைய கணக்கெடுப்புகளுடன் ஒப்பிடுகையில் கடந்த 10 ஆண்டுகளில் மக்கள்தொகை அதிகரிப்பு வேகம் குறைந்துள்ளது தெரியவந்தது. "ஒரு குடும்பம், ஒரு குழந்தை" என்ற அரசின் கொள்கையே இதற்கு காரணம் என்று கருதப்படுகிறது.
மக்கள்தொகை வளர்ச்சி வேகம் குறைந்ததால் உழைக்கும் வயதினர் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், குறிப்பாக கிராமங்களில் வேலைக்கு ஆளின்றி பொருளாதார வளர்ச்சி தடைபடலாம் என்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது.
14 அல்லது அதற்கு குறைந்த வயதினர் 16.6 சதவீதம். இது 2000ம் ஆண்டைவிட 6.29 சதவீதம் குறைவாகும். குழந்தைகளில் 6 ஆணுக்கு 5 பெண் குழந்தைகள் இருப்பதாகவும், அதனால் பின்னாளில் திருமணம் செய்வதில் பிரச்சனைகள் ஏற்படலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment