| எதுவும் விபத்தில் சிக்கி விட்டாரா என்ற அச்சமும், பரபரப்பும் ஏற்பட்டது. இந்நிலையில் இவர் சென்ற விமானம் பத்திரமாக தரையிறங்கி விட்டதாக மாநில கவர்னர் ஜே.ஜே.சிங் கூறியுள்ளார். பவன்ஹன்ஸ் தனியார் ஹெலிகொப்டர் நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் இன்று காலை 10 மணியளவில் தவாங்கில் இருந்து இடாநகர் நோக்கி புறப்பட்டது. காலை 11.30 மணிக்கு அங்கு வந்த சேர வேண்டிய ஹெலிகொப்டர் இன்னமும் வரவில்லை. ஹெலிகொப்டர் தவாங்கில் இருந்து புறப்பட்ட 20 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பில் இருந்து விலகியது. கடைசியாக தவாங் அடுத்த செலா பாஸ் பகுதியில் வந்த ஹெலிகொப்டர் ராடரில் தெரிந்தது. அதன் பிறகு 4 மணி நேரமாகியும் ஹெலிகொப்டர் இருக்கும் இடம் தெரியவில்லை. முதல்வருடன் மேலும் 2 பேர் ஹெலிகொப்டரில் இருந்தனர். ஹெலிகொப்டர் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. சமீபத்தில் அருணாச்சலில் தனியார் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்கள்ளானதில் 17 பேர் இறந்தனர். கடந்த 2009 ம் ஆண்டு செப்டம்பர் 2 ம் திகதியன்று நடந்த ஹெலிகொப்டர் விபத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி இறந்தார். இந்நிலையில் டோர்ஜீகாந்து சென்ற ஹெலிகொப்டர் மாயமானது பெரும் அச்சத்தை ஏற்படு்தியது. அருணாச்சல முதல்வர் சென்ற ஹெலிகொப்டர் மாயமானதை தொடர்ந்து, தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டன. தேடுதல் பணியில் ராணுவத்துக்குச் சொந்தமான 2 ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. முதல்வர் ஹெலிகொப்டர் மாயமானது குறித்து உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை கூறியதாவது, அருணாச்சலபிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு புறப்பட்டு சென்ற ஹெலிகொப்டர் எங்கே இருக்கிறது என இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. மீட்பு படையினர் ஹெலிகொப்டர் இருக்கும் இடத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வானிலை மோசமாக இருப்பதால் கொஞ்சம் சிரமம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் சென்ற இரோகாப்டர்-பி 3 ஹெலிகொப்டர் 4 முதல் 5 மாதங்களுக்குள் வாங்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார். 11. 30 மணி அளவில் இட்டாநகரில் தரையிறங்க வேண்டிய ஹெலிகாப்டர், மேசமான வானிலை காரணமாக மாற்று வழியில் பூட்டானில அவசரமாக தரையிறக்கப்பட்டது என்றும் இதில் பயணித்த 5 பேரும் பத்திரமாக உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவி்த்துள்ளனர். முதல்வர் ஹெலிகொப்டர் உரிய நேரத்தில் தரையிறங்காததால் 3 மணி நேரத்திற்கு பின்னர் பத்திரமாக உள்ளார் என்ற செய்தி உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பரபரப்பு அடங்கியது. |
Sunday, 1 May 2011
அருணாச்சல் முதல்வர் சென்ற ஹெலிகொப்டர் மாயம்: 3 மணி நேர பரபரப்புக்கு பின் பத்திரமாக உள்ளதாக தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment