Sunday, 1 May 2011

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி


அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று இலக்கைத் தாக்கக் கூடிய ஹட்ப்-8 என்ற ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணையானது 350 கிலோ மீற்றர் தூரம் வரை சென்று தாக்கக்கூடியது.
இந்த ஏவுகணை எந்த இடத்தில் இருந்து ஏவி சோதனை செய்யப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை. எனினும் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது என பாகிஸ்தான் ராணுவம் அறிவித்தது.
இந்த ரக ஏவுகணை முதன் முதலில் கடந்த 2007ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment