Sunday, 1 May 2011

கென்ய பகுதியில் சிங்கப்பூர் கப்பல் கடத்தல்



சிங்கப்பூர் நாட்டிற்கு சொந்தமான கப்பல் ஒன்று கென்யா கடல் பகுதியில் கடத்தப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரை சேர்ந்த எம்.டி ஜெமினி என்ற சரக்கு கப்பல் ஒன்று இந்தோனேஷியாவின் கோலா தான்சூங் பகுதயிலிருந்து கென்யாவின் மொம்பசாவிற்கு சென்று கொண்டிருந்தது.
அக்கப்பல் தான்சானியாவின் கடல் பகுதியை சேர்ந்த டார் இ சலாம் என்ற இடத்தின் அருகே சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment