Monday, 16 May 2011

கிளி. நாச்சிக்குடாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு


கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் நேற்றுக்காலை மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலத்தில் அடிகாயங்கள் காணப்படுவதாகவும் உடற் பகுதிகளில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும், கொலைசெய்யப்பட்ட பின் தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம்  தெரிவிக்கப்படுகின்றது.
நாச்சிக்குடாவைச் சேர்ந்த விமலதாசன் பவிதா (வயது 19) என சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment