அமெரிக்க அரசு தொலைக்காட்சியில் தோன்றி பேசிய ஒபாமா கூறியதாவது: ஒசாமா பின் லேடன் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி நடந்த இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு தீவிரமாக தேடப்பட்டு வந்தததாகவும், அமெரிக்காவின் நீண்ட கால திட்டம் தற்போது நிறைவேறியுள்ளதாகவும் மகிழ்ச்சி பொங்க கூறினார். இந்த நாள் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். நீதி நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்றார். ஒசாமா பாகிஸ்தானில் பதுங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் அமெரிக்க படைகள் ஒசாமா இருப்பிடத்தை நெருங்கியது. அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏ அதிகாரிகள் கொண்ட சிறிய குழு, இந்த ஓபரேஷனை தைரியமாக கையாண்டது. ஒரு கட்டத்தில் ஒசாமா பின் லேடன் தங்கியிருந்த காம்புவண்டை சுற்ற வளைத்த படைகள் லாவகமாக செயல்பட்டு ஒசாமாவை கொன்றது. தற்போது ஒசாமா பின் லேடனின் உடல் அமெரிக்க ராணுவத்தினாரல் கைப்பற்றப்பட்டுள்ளது. ஒசாமா கொல்லப்பட்டு விட்டதால் மட்டும் அல்குவைதா தாக்குதல் நின்று விடாது என்று முடிவுக்கு வந்து விட முடியாது. தொடர்ந்து அல்குவைதா எங்களை குறி வைத்து தாக்குதல்களை நடத்த திட்டமிடும். ஆனால் அவை முறியடிக்கப்படும். பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகள் தொடரும். 10 ஆண்டு காலத்துக்கும் மேலாக ஒசாமா பின் லேடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள், உளவு அதிகாரிகளுக்கு அமெரிக்க மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. இந்த வெற்றி செப்டம்பர் 11ம் திகதி இரட்டைக் கோபுர தாக்குதலில் பலியான அப்பாவி மக்களின் ஆத்ம சாந்திக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. அந்த பயங்கரவாத தாக்குதலில் உற்றார், உறவினர்களை பலி கொடுத்த அமெரிக்க குடும்பங்களை மறந்து விடவில்லை. இந்த தருணத்தில் அவர்களை நினைவு கூறுகிறோம். |
Sunday, 1 May 2011
இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள்: ஒபாமா மகிழ்ச்சி (வீடியோ இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment