Tuesday, 24 May 2011

அமெரிக்காவின் உதவியை ஏற்றுக்கொள்ளாத பாகிஸ்தான்



தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஒத்துழைப்பு அளித்து வந்ததற்காக பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா அதிகளவில் நிதியுதவி செய்து வந்தது.
பாகிஸ்தானில் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டு மக்களுக்கு கோபத்தை அதிகரித்துள்ளது. நாட்டின் இறையாண்மைக்கு எதிராக அமெரிக்கா அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் கழிவு பொருள் மேலாண்மை ஆகியவற்றில் உதவுவதற்காக அமெரிக்காவுடன் செய்யப்பட்டிருந்த 6 புரிந்துணைர்வு ஒப்பந்தத்தை பஞ்சாப் மாநில அரசு நேற்று ரத்து செய்தது.
இது அபோதாபாத் சம்பவத்துக்கு காட்டப்படும் எதிர்ப்பு என பஞ்சாப் மாநில சட்ட அமைச்சர் ராணா சனுல்லா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment