அப்போது அறைக்கு வந்த ஹோட்டல் பணிப்பெண்ணை டொமினிக் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கியதாக பொலிசில் புகார் கூறப்பட்டது. பொலிசார் வருவதற்குள் டொமினிக் அங்கிருந்து தப்பி நியூயார்க் நகருக்கு சென்றார். பொலிசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். டொமினிக் பிரான்ஸ் நாட்டின் மூத்த அரசியல் தலைவர். அவர் விரைவில் நடைபெறவுள்ள பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிட இருந்தார். அதற்குள் பாலியல் வழக்கில் சிக்கியதால் அந்த வாய்ப்பை இழந்து விட்டார். கைது செய்யப்பட்ட பிறகு முதன் முறையாக திங்கள்கிழமை அவர் நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி மெலீஸ் ஜாக்சன் வழக்கை விசாரித்தார். தன்மீதான குற்றச்சாட்டுகளை டொமினிக் மறுத்தார். ரூ.5 கோடிக்கு டொமினிக்கு ஜாமீனில் விட வேண்டும் என்று அவரத் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். ஆனால் அவர் தப்பிச் செல்வதற்கு வாய்ப்பிருப்பதால் வரும் 20ம் திகதி வரை காவலில் வைத்திருக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். வழக்கை அதே திகதிக்கு ஒத்திவைத்தார். |
Monday, 16 May 2011
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தலைவருக்கு ஜாமீன் மறுப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment