Monday, 16 May 2011

ஹெலிகாப்டர் விபத்து: 4 வீரர்கள் காயம்



தெற்கு ஆப்கானிஸ்தானில் மோசமான வானிலையில் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 4 கனேடிய வீரர்கள் காயம் அடைந்தனர்.திங்கட்கிழமை 25 வீரர்கள், 5 ஊழியர்கள் மற்றும் ஒரு கனேடிய நிருபருடன் பயணித்த இடுசினூக் ஹெலிகாப்டர் பஞ்ச்வாலி மாவட்டத்தில் தண்ணீர் இல்லாத ஆற்றுப் படுகையில் தரை இறங்க முயன்றது.
இதில் ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் உயிரிழப்பு இல்லை. இருப்பினும் 4 வீரர்கள் காயம் அடைந்தனர். இதில் ஒருவருக்கு தீவிரக் காயம் ஏற்பட்டுள்ளது. இருட்டான விடுதியில் பைலட் தவறான கணிப்பின் காரணமாக தரை இறக்க முயன்ற போது ஹெலிகாப்டர் நொறுங்கியது.
ஹெலிகாப்டர் பாகங்கள் நொறுங்கியதும் எரிபொருள் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இதனால் இருக்கையில் இருந்தவர்கள் தப்பி பிழைக்க நெரிசலில் மோதிக் கொண்டனர்.
விபத்து குறித்து குண்டு வீசும் நிபுணர் நிக் குர்டன் கூறுகையில்,"ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியதும் எரிவாயு கசிவு வாடை ஏற்பட்டது. இதனால் தீ பிடிக்கலாம் என்ற அபாயம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஹெலிகாப்டரில் தப்பிக்க நினைத்தேன்" என்றார்.
விபத்து இடத்திலேயே காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதர வீரர்களுடன் வந்த இரண்டாவது ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரை இறங்கியது. அவர்களது பயணம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்த வீரர்கள் இன்னொரு வாகனம் மூலம் தங்கள் ராணுவ முகாம்களுக்கு சென்றனர்.

No comments:

Post a Comment