Monday, 16 May 2011

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சுவிட்சர்லாந்து பிரஜை தாய்லாந்தில் கைது



போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சுவிட்சர்லாந்து பிரஜை ஒருவர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.கொக்கேய்ன் போதைப்பொருளை கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதென வெளிவிவகார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
47 வயதான தாய்லாந்தை வசிப்பிடமாகக் கொண்ட நபரை அந்நாட்டு கவால்துறையினர் கைது செய்துள்ளனர்.
புகாட் விமான நிலையத்தின் ஊடாக நான்கு கிலோகிராம் கொக்கேய்ன் போதைப்பொருளை கடத்த முயற்சித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு சட்டத்தின் அடிப்படையில் போதைப் பொருள் கடத்தல் நிரூபிக்கப்பட்டால் உச்சபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விபரங்களுக்கு-
http://www.swissinfo.ch/eng/politics/Swiss_arrested_in_Thailand_for_drug_trafficking.html?cid=30222516

No comments:

Post a Comment