Monday, 16 May 2011

அல்கொய்தா இயக்கத்தின் மிரட்டல்: அமெரிக்கா முழுவதும் பலத்த பாதுகாப்பு



பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழி வாங்க விரைவில் தாக்குதல் நடத்தப் போவதாக அல்கொய்தா தீவிரவாத இயக்கம் மிரட்டல் விடுத்தது.இதற்கிடையே பின்லேடன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சி.டி.க்கள் மற்றும் ஆவணங்கள் மூலம் அமெரிக்கா மீது மீண்டும் ஒரு பெரிய தாக்குதலுக்கு அல்கொய்தா திட்டமிட்டிருப்பது தெரிய வந்தது.
இரட்டை கோபுரம் தாக்குதலின் பத்தாம் ஆண்டு நினைவு நாளான செப்டம்பர் 11ந் திகதி அமெரிக்க ரயில்களில் பெரிய தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் தயாராகி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. பின்லேடன் கொல்லப்பட்டு விட்டாலும் கூட, அவரது ஆதரவாளர்கள் இதற்கான முயற்சிகளில் ஈடுபடக்கூடும் என்று அமெரிக்கா கருதுகிறது.
மேலும் சிகாகோ நகரில் இதுவரை இல்லாத அளவுக்கு தாக்குதல் ஒன்றை நடத்த அல்கொய்தா வியூகம் வகுத்திருப்பது உளவுத்துறை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தலிபான் தீவிரவாதிகள் எந்த நேரத்திலும் நடத்தலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்க மக்களிடம் குறிப்பாக சிகாகோ நகர மக்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ராணுவம் அறிவித்துள்ளது.
தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க உள்ளூர் பொலிசாருக்கு கூடுதல் நவீன கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. சிகாகோ நகரில் அதிகபட்சமாக எல்லா தெருக்களிலும் பொலிசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



No comments:

Post a Comment