Sunday, 1 May 2011

மாலத்தீவில் அதிபருக்கு எதிராக தொடரும் மக்கள் கிளர்ச்சி



சார்க் உறுப்பு நாடுகளில் சுற்றுலாத்துறையில் சிறந்த நாடான மாலத்தீவில் அதிபர் முகமது நஷீத் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பெரும் கலவரம் நடந்தது. கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் மீது பொலிசார் தடியடி நடத்தியும் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். இதில் பலர் காயம் அடைந்தனர்.
மாலத்தீவுகளில் அதிபராக முகமது நஷீதின் பதவி வகித்து வருகிறார். தற்போது இவரது நிர்வாகத் பதவி விலக வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து கூறிய காவல் துறை செய்தித் தொடர்பாளர் அகமது ஷியாம் கூறுகையில்,"ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிசார் மீது கற்களை வீசி தாக்க முயன்றனர். பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கவும் அவர்கள் முயன்றனர். இவ்வாறு வன்முறையில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்" என்றார்.
எதிர்க்கட்சியான திவேஹி ரெய்துங்கா கட்சியின் செய்தித் தொடர்பாளர் முகமது ஷெரீப் கூறியதாவது: மாலத்தீவில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு போன்றவற்றை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் எங்களது கட்சி எம்.பி. ஒருவர் உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பலர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை உடனடியாக சரிவரத் தெரியவில்லை.

No comments:

Post a Comment