Sunday, 1 May 2011

12 வயது சிறுவன் மனித வெடிகுண்டாக வந்துத் தாக்குதல்



ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் 12 வயது சிறு‌வனை மனித வெடிகுண்டாக வைத்து தாக்குதல் நடந்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதில் 4 பேர் பலியாயினர். பலர் படுகாயமடைந்தனர். ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது பக்டிகா மாகாணம்.
பர்மால் மாவட்டத்தில் உள்ள மார்கெட் பகுதியில் நேற்று ஞாயிறு என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது திடீரென 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் மனித வெடிகுண்டாக மார்‌க்கெட்டிற்குள் நுழைந்து வெடிக்க செய்தான். இதில் ஒரு பெண் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாயினர். 12 பேர் காயமடைந்தனர்.
சம்பவம் நடந்த இடத்தில் ‌பாதுகாப்புப்படையினர் ஆய்வு செய்ததில் 12 வயது சிறுவன் மனித வெடிகுண்டாக வந்தது தெரியவந்து. வெடிகுண்டால் சிதறிக்கிடந்த அந்த சிறுவன் தலிபான்களால் மனித வெடிகுண்டாக அனுப்பப்பட்டிருக்கலாம் என பக்டிகா மாகாண செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இளைஞர்களை மனித வெடிகுண்டாக பயன்படுத்தி வந்த தலிபான்கள் தற்போது சிறார்களையும் ஈடுபடுத்தி வருவது ஆப்கான் பாதுகாப்புப்படையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment