Sunday, 1 May 2011

ஜப்பானில் அணு சக்தி ஆலோசகர் பதவி ராஜினாமா



ஜப்பானில் பிரதமர் நேட்டோ கானின் அணுசக்தி ஆலோசகர் திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமி தாக்குதலால் புகுஷிமா, டச்சி அணு உலைகள் வெடித்ததில் கதிர்வீச்சு தாக்குதல் நடந்தது.
இந்நிலையில் கதிர்வீச்சு தொடர்பாக தடுக்க வேண்டிய நடவடிக்கைள் குறித்து கடந்த மார்ச் 16ம் திகதி பிரதமர் நேட்டோ கான் தனது அணுசக்தி ஆலேசாகராக டோஸ்ஹிஸோ கோசாகா என்ற விஞ்ஞானியை நியமனம் செய்தார்.
இவர் டோக்கியோ பல்கலைகழக பேராசிரியர் ஆவார். இவர் தற்போது பிரதமருடன் ‌ஏற்பட்ட கருத்து வேறுபாடால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து டோஸ்ஹிஸோ கேசாகா கூறியதாவது: அணு உலை விபத்து குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டதிட்டங்கள், முன்‌னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக எனது ஆலோசனையை ஜப்பான் பிரதமர் கவனத்தில் கொள்ளவில்லை.
இனிமேலும் எனது ஆலோசனைகள் பிரதமர் அலுவலகத்தில் தேவையில்லை என நினைக்கிறேன். ஜப்பானின் அணுசக்தி கமிஷனும் கதிர்வீச்சு தாக்குதல் தடுப்பது குறித்த அணு சட்டதிட்டங்களை சரிவர கடைபிடிக்கவில்லை. அதற்கு மாறாக தாமதப்படுத்துகிறது. இவ்வாறு கேசாகா கூறினார். எனினும் இவரின் ராஜினாமா குறித்து பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

No comments:

Post a Comment