Sunday, 1 May 2011

8 வயது மாணவன் பள்ளியில் துப்பாக்கி விற்றதால் பரபரப்பு



அமெரிக்காவில் நியூயார்க் நகர பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் தன் சக மாணவனுக்கு துப்பாக்கியை விற்பனை செய்துள்ளான்.
அமெரிக்காவின் குயின்ஸ் நகரை சேர்ந்தவர் இக்னாஸி யோ கால்வன். இவரது மிகன் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.
மாணவனின் தந்தை தன்னுடைய பாதுகாப்பிற்காக 9 எம்.எம் பிஸ்டல் வகையை சேர்ந்த துப்பாக்கியை வைத்திருந்தார். சம்பவத்தன்று மாணவன் தன்னுடைய துப்பாக்கியை பள்ளிக்கு எடுத்து சென்று சக மாணவனிடம் 3.50 டொலர் அளவிற்கு விற்பனை செய்துள்ளான்.
துப்பாக்கியை வாங்கிய மாவணவனின் தாய் பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தினர் பொலிசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் நகர பொலிஸ் அதிகாரி துப்பாக்கியை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினார்.
குயின்ஸ் நகர குடும்ப நீதிமன்றத்தில் மாணவன் மற்றும் அவனது பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி நிர்வாகம் துப்பாக்கியை விற்பனை செய்த மாணவன் மற்றும் வாங்கிய மாணவனை பள்ளியிலிருந்து நீக்கம் செய்துள்ளது.

No comments:

Post a Comment