Monday, 16 May 2011

அப்பாவி மக்களை மிரட்டும் மர்ம நபர்



பாரிய கத்தியொன்றைக் கையில் வைத்துக் கொண்டு வீதியில் செல்பவர்களை ஒரு நபர் மிரட்டும் காட்சிகளை ஒருவர் தனது தொலைபேசிக் கமெரா மூலம் படமாக்கியுள்ளார்.பீட்டர்பரோ பகுதியில் ஒரு திறந்தவெளிப் பூங்காவிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பூங்காக்களில் உள்ளவர்களை இவர், "உங்களில் அநேகமானவர்களை நான் கத்தியால் குத்துவேன். அதுவும் கழுத்தில் குத்துவேன்" என்று சத்தமிட்டு மிரட்டியுள்ளார்.
லியாம் ரெஷ் என்ற 23 வயது நபரே இவ்வாறு நடந்து கொண்டுள்ளதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவில் பிறந்த நாள் விழாவொன்றைக் கொண்டாட வந்திருந்தவர்கள் உட்பட பலரை இவர் மிரட்டியுள்ளார்.
இவரின் நண்பரான 19 வயதான ஜோஷ் பட் என்பவர் இந்தப் படங்களைப் பிடித்தவரைக் கண்டு அவரை மிரட்டி தொலைபேசியை பறிக்க முயன்றுள்ளார்.
இந்தச் சம்பவத்துக்காக இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதையடுத்து இருவருக்கும் தலா ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
முகப்பு

No comments:

Post a Comment