Sunday, 1 May 2011

ஓடும் ரயிலில் தனியாக இருந்த பெண் பயணியை கற்பழித்த டிக்கெட் பரிசோதகர்



குடிபோதையில் ஓடும் ரயிலில் பெண்ணைக் கற்பழித்துள்ளார் ஒரு டிக்கெட் பரிசோதகர்.
25 வயதான அந்தப் பெண் வெள்ளிக்கிழமை இரவு, ஆஜ்மீரிலிருந்து அபு சாலைக்கு ஆஜ்மீர் - தாதர் விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார். அந்த ரயிலில் டிக்கெட் பரிசோதகராக இருந்தவர் டி.டி.மிஸ்ரா என்ற 52 வயது நபர். இவர் குளிர்சாதன வகுப்பில் தனியாக இருந்த அந்தப் பெண் பயணியை அணுகி கற்பழித்துள்ளார். அப்போது அந்த டிக்கெட் பரிசோதகர் குடிபோதையில் இருந்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், நான் மட்டும் அந்தப் பெட்டியில் தனியாக இருந்தேன். அந்தப் பெட்டியில் மற்ற இருக்கைகள் காலியாகவே இருந்தன. இதைப் பயன்படுத்தி உள்ளே வந்த மிஸ்ரா, குடிபோதையில் என்னைக் கற்பழித்து விட்டார். அப்பெண்ணின் கூச்சலைக் கேட்டு பக்கத்துப் பெட்டிகளில் இருந்த பயணிகள் விரைந்து வந்து டிக்கெட் பரிசோதகரைப் பிடித்துள்ளனர். அவரை அடித்து உதைத்து அபு சாலை ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
ஆரம்ப கட்ட விசாரணையில் கற்பழிப்பு நடந்தது உண்மை என்று தெரியவந்தது. இதையடுத்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து ரயில்வே கூடுதல் எஸ்.பி. சுரேஷ் குமார் கூறுகையில், மிஸ்ராவை அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்ட மிஸ்ரா, அந்தப் பெண்ணிடம் நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டு கற்பழித்துள்ளார் என்றார்.

No comments:

Post a Comment