Monday, 4 July 2011

இலங்கையில் தயாரிக்கப்படும் ஆளில்லா விமானங்கள்



இலங்கையில் ஆளில்லா விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளதாக சிங்கள பத்திரிகையொன்ற செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தினரும் மொரட்டுவை பல்கல்கலைக்கழகத்தினரும் கூட்டாக இணைந்து குறித்த விமானம் தயாரிக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
ஆளில்லா விமானம் மற்றும் கண்ணி வெடி அகற்றும் இயந்திரம் ஆகியன அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
ஏற்கனவே ஆளில்லா விமானமொன்று தயாரிக்கப்பட்டு பரீட்சார்த்த முயற்சிகள் பூர்த்தியடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
அதிகளவு இராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்து அவற்றை பிராந்திய வலய நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment