Saturday 10 December 2011

சிரியாவில் தொடரும் போராட்டம்: 24 பேர் பலி

துனிசியா மற்றும் எகிப்து நாடுகளில் ஜனாதிபதிக்கு எதிராக புரட்சி ஏற்பட்டதையடுத்து சிரியாவிலும் ஜனாதிபதி பசார் அல் ஆசாத்துக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இந்த போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கெயில் நகரத்தில் நேற்று(09.12.2011) ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.
பல்லாயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு எதிராக ஜனாதிபதியின் ஆதரவாளர்களும் திரண்டார்கள். இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர்.
இதை கட்டுப்படுத்த இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 24 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை 4 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அங்கு பயங்கர கலவரம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment