தாய்லாந்தில் பெய்த பெருமழையால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர், 1500 தொழிற்சாலைகள் நீரில் மூழ்கின. இதனால் உலகளவில் உற்பத்தித் தொழில் சங்கிலி பாதிக்கப்பட்டது என்று சுவிஸ் ரே தெரிவித்துள்ளது.
இந்நிறுவனத்தைச் சேர்ந்த பிரயன்கிரே என்பவர், “இந்த வெள்ளத்தால் மனித உயிர்கள் அழிந்தது போக” தாய்லாந்து நாட்டின் பொருளாதாரமும் பெரும் பாதிப்புக்குள்ளானது. நிறுவனங்களின் செயற்பாடு முடங்கிப்போனது. இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபட்ட தாய்லாந்துக்கு இன்னும் சில வருடங்கள் ஆகலாம் என்றார்.
மேலும் பல வாரங்களாகத் தொழிற்சாலைகள் நீரில் மூழ்கியிரிப்பதால் கார் உதிரி பாகங்கள், மின்சாரக் கருவிகள், மின்னனுச் சாதனங்களின் உற்பத்தி போன்றன பாதிக்கப்படுவதால் உலகளவில் பெருந்தொழில்கள், உதிரிபாகங்கள் கிடைக்காமல் முடங்கியுள்ளன.
கடந்த ஜீலை மாதம் முதல் தாய்லாந்தில் பருவமழை மற்றும் டை பூனின் பாதிப்பு கடுமையாக இருந்தது. ஜீலை முதல் அக்டோபர் வரை தாய்லாந்தின் மையப்பகுதியும் வடபகுதியும் கடந்த ஜம்பதாண்டுகளில் சந்தித்திராத மழைக்கொடுமைக்கு ஆளானது.
No comments:
Post a Comment