Saturday 10 December 2011

அமைதிக்கான நோபல் பரிசு மூன்று பெண்களுக்கு வழங்கப்பட்டது

அமைதிக்கான நோபல் பரிசை மூன்று பெண்கள் பெற்றுக் கொண்டனர். இந்த பரிசு லிபெரியா ஜனாதிபதி எல்லன் ஜான்சன் சர்லிப், அதே நாட்டை சேர்ந்த லெமக் போவீ, ஏமன் நாட்டின் டவாக்குல் கர்மன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
பலத்த கரகோஷத்துக்கிடையே தங்களுக்கான பரிசு மற்றும் பதக்கங்களை இவர்கள் பெற்றுக் கொண்டனர்.
அநீதி, சர்வாதிகாரம், பாலியல் வன்முறை ஆகியவற்றிற்கு எதிராக போராடியதற்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
நோபல் பரிசுக்கான குழுத்தலைவர் தேர்ப்ஜெர்ன் ஜாக்லாந்து கூறுகையில், பரிசை பெற்ற பெண்கள் மனித உரிமை, பெண்களுக்கு சம உரிமை மற்றும் அமைதிக்கான தூதர்களாக விளங்குவதாக கூறினார்.

No comments:

Post a Comment