| இதுகுறித்து அமீர்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்பதை ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். மருத்துவச் சிக்கல்கள் காரணமாக செயற்கை கருத்தரிப்பு(வாடகைத்தாய்) மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று வைத்தியர்கள் எங்களை அறிவுறுத்தினர். இதையடுத்து செயற்கை கருத்தரிப்பு மூலம் கடந்த 1 ஆம் திகதி எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால் நாங்கள் மகிழ்ச்சியில் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு அமீர்கானுக்கு முதல் மனைவி ரீனா தத்தா மூலம் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளது. முதல் மனைவியை அமீர்கான் விவாகரத்து செய்த பின்னர், 2001ல் லகான் திரைப்படத்தில் துணை இயக்குநராக இருந்த கிரண் ராவுடன் காதல் ஏற்ப்பட்டு 3 ஆண்டுகளுக்கு பின்பு அவரை திருமணம் செய்துக் கொண்டார். ஏற்கனவே கிரண்ராவ் ஒரு முறை கர்ப்பம் தரித்தார். ஆனால், அது கலைந்துவிட்டதையடுத்து நீண்ட காலமாக கர்ப்பமாகவில்லை. தற்போது கிரண்ராவ் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளார். |
Wednesday, 7 December 2011
பாலிவுட் நடிகர் அமீர்கான்-கிரண்ராவ் தம்பதிக்கு ஆண் குழந்தை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment