டெஸ்ட் போட்டிகளில் '800' விக்கெட்டுகளைக் கைப்பற்றி புதிய உலகசாதனை படைத்ததன் நினைவாகத் தனது சுயசரிதைக்கு "800' என்று பெயரிட்டுள்ளார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்விலேயே அவர் தனது சுயசரிதையை வெளியிட்டுள்ளார். எனினும் இந்தப் புத்தகம் ஆகஸ்ட் மாதமே விற்பனைக்கு வருமெனத் தெரிவிக்கப்படுகிறது. 38 வயதான முரளிதரன் கடந்த வருடம் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். எனினும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தற்போது விளையாடி வரும் இவர் இவ்வாரம் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி முடிந்ததும் ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறத் திட்டமிட்டுள்ளார். "800' என்ற தனது சுயசரிதைப் புத்தகத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் தான் சந்தித்த சுவாரஸ்யமான சர்ச்சைக்குரிய மற்றும் வேதனையான விடயங்கள் குறித்து மனந்திறந்து பேசியுள்ளார். இவரது சுயசரிதைப் புத்தகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. |
Thursday, 17 February 2011
முரளியின் சுயசரிதை'800'
Labels:
முரளியின் சுயசரிதை'800'
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment