பிரபல சிங்கள நடிகையொருவர் அவரது படுக்கையறைக்குள் நுழைந்த மர்ம நபர்களால் கழுத்து நெறிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இரத்மலானை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பிரபல சிங்களத் தொலைக்காட்சி மற்றும் சினிமா நடிகையான வினு வெத்தமுனி என்பவரே அவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு இரத்மலானை பிரதேசத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட நடிகையின் வீட்டுக்கு நேற்றிரவு இரண்டு மர்ம நபர்கள் வந்ததாகவும், அவர்களே அவரைப் படுகொலை செய்திருக்க வேண்டும் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது. வினு வெத்தமுனி அந்த வீட்டில் தன் மகன் மற்றும் தாயுடன் வசித்து வந்துள்ளார்.
இன்று காலையில் அவரது படுக்கையறைக் கதவு தாளிடப்பட்டிருந்ததுடன், காலையில் நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திருக்காத நிலையில் சந்தேகம் கொண்ட அவரது தாயார் பொலிசுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
பொலிசார் வந்து நடிகையின் படுக்கையறைக் கதவை உடைத்துப் பார்த்தபோது அவர் கழுத்து நெ ரித்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரைச் சந்திக்க வந்த மர்ம நபர்களின் சில ஆடைகளும் அந்த அறையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:
Post a Comment