Saturday, 12 March 2011

பிரான்ஸ் ஹோட்டலில் பாரிய தீ விபத்து



பாரிஸ் ஹோட்டல் ஒன்றில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
புகழ் பெற்ற சுற்றுலா தளமான மான்ட்மார்டேவுக்கு அருகே உள்ள பகுதியில் உள்ள ஹோட்டல் டேலா போர்ச்சோவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
ஹோட்டல்களில் புதிதாக குடியேறிய குடும்பங்கள் நிரந்தர குடியிருப்பு கிடைக்கும் வரை வேறு இடங்களில் தங்கி உள்ளன.
ஹோட்டல் தீயால் ஏற்பட்ட கரும் தீ புகையில் இருந்து 3 பேர் காப்பாற்றப்பட்டனர். விபத்தில் உயிரிழந்த இரு நபர்களின் பெயர்கள் தெரியவில்லை. அவர்களது 7 வயது மற்றும் 9 வயது குழந்தைகள் புகை மண்டலத்தில் இருந்து காப்பாற்றப்பட்டனர்.
கடந்த 2005 ஆம் ஆண்டு பாரிஸ் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் இறந்தனர். 6 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த தீ விபத்து வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்ட இரு நாளில் இந்த புதிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஹோட்டல் கட்டிடம் உரிய நிலையில் இல்லாத்தை தொடர்ந்து நிர்வாகத்தினர் மீது குற்றச்சாற்றுகள் பதிவாகியுள்ளன.
2005 ம் ஆண்டு தீ விபத்து மூலம் பிரான்ஸ்க்கு குடியேறும் ஏழை மக்கள் மிக மோசமான சூழ்நிலையில் உள்ள விடுதிகளில் தங்குவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

No comments:

Post a Comment