Thursday, 28 April 2011

கடத்தப்பட்ட 4 பிரெஞ்சு நபர்களின் வீடியோவை அல்கொய்தா வெளியிட்டது



வடக்கு ஆப்பிரிக்க பிரிவைச் சேர்ந்த அல்கொய்தா தீவிரவாதிகள் நைஜீரியாவில் கடத்திச் சென்ற 4 பிரெஞ்சு நபர்களின் புதிய வீடியோவை வெளியிட்டனர்.ஆப்கானிஸ்தானில் இருந்து பிரான்ஸ் துருப்புகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்பது அல்கொய்தா தீவிரவாதிகளின் கோரிக்கை ஆகும். கோரிக்கை ஏற்கப்படாத பட்சத்தில் கடத்தப்பட்ட பிரெஞ்சு நபர்களுக்கு விபரீத விளைவு ஏற்படும் என அல்கொய்தா பிரிவினர் எச்சரித்து உள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் கடத்திச் செல்லப்பட்ட பிரெஞ்சு நபர்களின் வீடியோ டேப்பை செவ்வாய்க்கிழமை அல்கொய்தா அமைப்பினர் வெளியிட்டனர். பிரெஞ்சு நபர்கள் முழங்காலிட்டபடி நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களைச் சுற்றி துப்பாக்கிகளை ஏந்தியவாறு அல்கொய்தாவினர் நிற்கின்றனர்.
பிணை நபர்களாக கொண்டு செல்லப்பட்டவர்களின் முகங்கள் மறைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 11 மற்றும் 13ம் திகதிகள் இடையே ஓடியோச் செய்தியும் தரப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் போரில் பிரான்சுக்கு முழு ஈடுபாடு கிடையாது. எனவே அந்த துருப்புகள் உடனடியாக அங்கிருந்து விலக வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி உடனடியாக பதிலளிக்க வேண்டும் என அல்கொய்தாவினர் எச்சரித்துள்ளனர்.
நைஜீரியாவில் கடந்த செப்டம்பர் மாதம் 4 பிரெஞ்சு அரிவா மற்றும் வின்சி ஊழியர்கள் உள்பட 7 அயல் நாட்டவர்களை அல்கொய்தா தீவிரவாதிகள் கடத்தினர்.

No comments:

Post a Comment