Thursday, 28 April 2011

தென் சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட பாரிய காட்டுத் தீயினால் போக்குவரத்திற்கு பாதிப்பு



சுவிட்சர்லாந்தின் தென் பகுதியில் ஏற்பட்ட பாரிய காட்டுத் தீயினால் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.தென் சுவிட்சர்லாந்தின் விஸ்ப் பகுதி காடுகளில் இவ்வாறு தீ பரவிக் கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
நாட்டில் நிலவி வரும் வெப்பத்துடன் கூடிய காலநிலையினால் காட்டுத் தீ வேகமாக பரவியதெனத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், தீ ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பார ஊர்திகள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காட்டுத் தீ காரணமாக பெருமளவிலான வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடவில்லை.
மேலதிக விபரங்களுக்கு-
http://www.swissinfo.ch/eng/swiss_news/Main_road_reopens_as_fire_comes_under_control.html?cid=30090660

No comments:

Post a Comment