அங்கு மன்னருக்கு எதிராக பொது மக்கள் பெரும் போராட்டம் நடத்தினார்கள். அதில் 30 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து சவுதி அரேபியா ராணுவத்தின் உதவியுடன் போராட்டம் ஒடுக்கப்பட்டது. தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது எதிர்க்கட்சி பிரமுகர்கள் 7 பேர் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களை கொலை செய்ய அவர்கள் முன் கூட்டியே திட்டமிட்டதாக புகார் கூறப்பட்டது. போராட்டத்தின் போது 2 பொலிசார் கொல்லப்பட்டனர். அதற்கான வீடியோ ஆதாரங்களும் வெளியிடப்பட்டன. அவர்கள் மீது ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று 4 பேருக்கு மரண தண்டனை விதித்து ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மற்ற 3 பேரின் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு பக்ரைனின் மனித உரிமை அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அங்கு மீண்டும் கடுமையான போராட்டம் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளது. |
Sunday, 1 May 2011
பக்ரைனில் போராட்டத்திற்கு காரணமான 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment