Sunday, 1 May 2011

துனிஷியாவில் இருந்து 800 கைதிகள் தப்பியோட்டம்



துனிஷியா நாட்டில் இரு வேறு சிறைச்சாலைகளில் இருந்து 800 கைதிகள் தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வட ஆப்பிரிக்க நாடான துனிஷியாவின் மத்திய மேற்கு மாகாணத்தில் 150 கி.மீ தொலைவில் கஸாரீன் என்ற சிறைச்சாலையும் அங்கிருந்து 95 கி.மீ தொலைவில் கபாஸா எனும் சிறைச்சாலையும் உள்ளன.
இதில் கஸாரீன் சிறைச்சாலையில் உள்ள இரு அறைகளில் உள்ள கைதிகள் இருவர் தீவைத்தனர். இதனால் தீ பரவுவதாக கிளம்பிய வதந்தியால் அங்கு அடைக்கப்பட்டிருந்த 522 கைதிகள் தப்பியோடினர்.
அதே நேரத்தில் கபாஸா சிறைச்சாலையில் கைதிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‌ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனை பயன்படுத்தி 300 கைதிகள் தப்பிய‌ோடிவிட்டனர். ஒரே நேரத்தில் இரு வேறு சிறைச்சா‌லையில் 800 கைதிகள் தப்பியோடியுள்ளனர்.
இது குறித்து துனீசிய சிறை வட்டாரம் தெரிவிக்கையில் இதுவரை ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஒரு மணிநேரத்தில் 35 கைதிகள் பிடிப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
இந்நிலையில் துனிஷிய அரசு விடுத்துள்ள அறிக்கையில் தப்பியோடிய கைதிகள் தாங்களாகவே சரணடைந்தால் பொதுமன்னிப்பு அளிக்கப்படும். இல்லையேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment