Sunday, 1 May 2011

குண்டு வெடிப்பு சம்பவத்தில் கனடிய கர்ப்பிணி பெண் உயிரிழப்பு



மொராக்கோ சுற்றுலா விடுதி உணவகத்தில் ஆணிகள் நிரம்பிய குண்டு வெடித்ததில் கனடா கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவர் உயிரிழந்தனர்.
மாரக்ச் நகரில் வியாழக்கிழமை இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த பயங்கர தாக்குதலில் மொத்தம் 14 பேர் கொல்லப்பட்டனர். குண்டு வெடிப்பில் இஸ்ரேலிய கனடியரான மிக்சல் செகிரி மற்றும் மொராக்கோவில் பிறந்த மெசோட் விஸ்மன் உயிரிழந்தனர்.
இந்தக் கனடா தம்பதி காசபிளான்காவில் உள்ள விஸ்மனின் பெற்றோரை சந்திக்கச் சென்ற போது உயிரிழந்தனர். அவர்கள் மொராக்கோவின் சுற்றுலாத் துறையின் அணிகலனாக கருதப்படும் நகரில் பகல்நேர சுற்றுலா மேற்கொண்டபோது இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இறந்து போன தம்பதிக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். அந்தக் குழந்தை தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் உள்ளது. கடந்த 2007ம் ஆண்டு கோடையில் மிக்சேல் செர்கி மற்றும் விஸ்மனுக்கு திருமணம் நடந்ததாக செர்கியின் நெருங்கிய நண்பர் ஸ்டெபானி டாட்வுன் நினைவு கூர்ந்தார்.
குண்டு வெடிப்பில் இறந்த செர்கிக்கு 29 வயது ஆகிறது. அவரது கணவர் விஸ்மனுக்கு 31 அல்லது 32 வயது இருக்கலாம். குண்டு வெடிப்பு தற்கொலைப்படை நபரால் மேற்கொள்ளப்படவில்லை.
ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கி வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது என மொராக்கோ உள்துறை அமைச்சர் டைப் செகாய் தெரிவித்தார். வெடிகுண்டில் ஆணிகள், அலுமினியம் நைட்ரேட் நிரப்பப்பட்டு இருந்தது.

No comments:

Post a Comment